St Joseph ITI
Our History – A Legacy of 7 Decades

Our History – A Legacy of 7 Decades

சலேசியர்களால் நடத்தப்பட்டு வரும் புனித வளனார் தொழிற் பயிற்சி மையம் முதன் முதலில் அருட்திரு. Hugh Tuena அடிகளார் அவர்களால் 1953-ஆம்ஆண்டு தொடங்கப்பட்டது தச்சுப் தொழில் பயிற்றுவிக்கப்பட்டது. இப்பயிற்சிகள் அனைத்தும் ஏழை எளிய வாழ்வில் வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

1962-ஆம் ஆண்டு புனித தொன்போஸ்கோ தொழிற் பள்ளியானது பெயர் மாற்றம் பெற்று புனித வளனார் தொழிற் பயிற்சி மையமாக அரசு அங்கீகாரம் (Govt Approved) பெற்ற தருனத்தில் 5 வருட தச்சு பயிற்சியானது 3 வருட பயிற்சி காலமாக அரசானனை (Govt. Order) பிரப்பிக்கப்பட்டது அதன் பின் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து 120 பேர் கொண்ட தச்சு பயிற்சி பெற்ற 1970-ஆம் ஆண்டு தனி சிறப்பு பயிற்சியாக விளங்கியது.

1976-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம்தேதி 15 மாணவர்களை கொண்ட ஒரு புதிய பயிற்சி பிரிவு (Auto Garage & Mechanical Section) மெக்கானிக் மோட்டார் வாகனம் துவங்கப்பட்டது பின்பு மாணவர்களின் வருகை அதிக அளவில் இருந்தப்படியால் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் (Driving License) வழங்கப்பட்டது.

சகோ.டோபோலி (Bro.Toffoli) அவர்களின் ஆலோசனையின் பெயரில் 1980-ஆம் ஆண்டில் நமது வளாகத்தில் தையல் பயிற்சியானது 4 மாணவர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு தையல் சாதனம் (Tailoring) வழங்கப்பட்டது.

1985-ஆம் ஆண்டு திரு. தேவசாகயம் நமது முன்னால் மாணவர் மற்றும் ஒய்வு பெற்ற தமிழ்நாடு அரசு காவல் உதவியாளர் (Police Band) இசை பயிற்சியானது 150 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்திய ராணுவத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 120 மாணவர்கள் இந்திய கப்பற்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

1991-ஆம்ஆண்டு பற்றவைப்பு (Welding) தொழிற்பிரிவானது தற்காலிமாக தச்சு பயிற்சி மையத்தில் துவங்கப்பட்டு நமது உபகாரிகளின் உதவியுடன் (Belgian agency ” Comide”) ஒரு புதிய கட்டிடமானது (Auto Section) பிரிவின் கட்டிகத்திற்று மிக அருகில் கட்டப்பட்டது. 14 மாணவர்களை கொண்ட இந்த ஒரு வருட பயிற்சிக்கு பின் அரசு தேர்வில் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.

1995-ஆம் ஆண்டு (Electrician) மின் பணியாளர் பிரிவும் துவங்கப்பட்டது. அருட்திரு.அடிகளார் அவர்களே இந்த தொழிற் பயிற்சி மையத்துக்கு ஒரு கட்டமைப்பைக் கொடுத்தவர். அவரே ஐ.டி.ஐ மற்றும் விடுதி கட்டங்களை உருவாக்கியவர்.