
௨௮.௧௦ ௨௦௨௪ (28.10.2024) அன்று செயின்ட் ஜோசப் தொழிற்பள்ளியில் சென்ற ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, வேலூர் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் திருமதி. காயத்ரி அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு. தனகீர்த்தி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தனர்.
தாளாளர் தந்தை பேட்ரிக் ஜோஜி ச. ச. மற்றும் முதல்வர் தந்தை பால் மார்க் ச. ச. அவர்களும் இந்த விழாவினை சிறப்பாக தலைமையேற்று ஒருங்கிணைத்து சிறப்பு செய்தனர்.
மேலும் இந்த நல்ல நாளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பல்வேறு விதங்களில் பங்கு பெற்று இந்நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் பயிற்சி முடித்த வெல்டிங் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.








மிகவும் சிறப்பான நிகழ்ச்சி
மிகவும் நன்றாக இருந்தது. தாளாளர் தந்தை அவர்களுக்கும் முதல்வர் தந்தை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.